தனது காதலனுடன் நாவலப்பிட்டிய, கலபொட நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்றிருந்த யுவதியொருவர், நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
யாலேகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
மலைநாட்டில் கடும் மழை பெய்துவருகின்றது. நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் கலபொட நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் திடீரென அதிகரித்ததன் காரணமாக தனது காதலி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக இளைஞர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன யுவதியை தேடும் பணியை பொலிஸார், இராணுவம், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.










