காலைக்கூட்டத்தின்போது மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு – இரத்தினபுரியில் சோகம்

இரத்தினபுரி, நிவிதிகல கல்வி வலயத்துக்குட்பட்ட கலவான, மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கலவான மீபாகம பாடசாலையின் தரம் 8 கல்வி கற்கும் 13 வயதுடைய இமல்கா சத்ஸரணி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காலை நேர ஆராதனை ( காலைக்கூட்டம்) நடைபெற்றுக்கொண்டிருந்த போது குறித்த மாணவி மயங்கி விழுந்துள்ளார். உடனே குறித்த மாணவியை கல்லான வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதித்த போது மாணவி உயிரிழந்துள்ளதாக கலவான வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்ட மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கலவான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கலவான காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு உயிரிழந்த மாணவி கலவான மரமரடநபயஅய குக்குலேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.

எம்.எப்.எம். அலி

Related Articles

Latest Articles