காஸாவிற்காக இன்று தீர்க்கமான வாக்கெடுப்பு

காஸா பகுதியில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 99 வது பிரிவின் கீழ், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இது தொடர்பான முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகம், பாதுகாப்பு கவுன்சிலில் உரிய தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு 09 வாக்குகள் அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles