கண்டி கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துல்முல்லை தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் அச்சத்துக்கு மத்தியிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டத்தில் நேற்றிரவுகூட (21.10.2020) கன்று குட்டியொன்றை சிறுத்தை வேட்டையாடி காட்டுப்பகுதிக்கு இழுத்துச்சென்றுள்ளதால் கால்நடை வளர்ப்பாளர்கள் கடும் கவலையில் இருக்கின்றனர்.
கித்துமல்முல்லை தோட்டத்தைச் சூழவுள்ள பகுதி காடாகியுள்ளது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.
அண்மைக்காலமாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குவரும் சிறுத்தைகள் நாய், ஆடு உள்ளிட்டவற்றை வேட்டையாடி திண்பதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் மாடு பண்ணையொன்றுக்குள் நேற்றிரவு (21) புகுந்துள்ள சிறுத்தை கன்றுகுட்டியொன்ற கடித்து குதறி – காட்டுப்பகுதிக்கு இழுத்துச்சென்றுள்ளனர். இன்று காலை பண்ணைக்கு சென்ற கால்நடை வளர்ப்பாளர், கன்றுக்குட்டி காணாமல்போய்விட்டது என தேடியுள்ளார். இதன்போது காட்டுப்பகுதியில் கன்றுக்குட்டி இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கும் தெரியப்படுத்துள்ளது.
