கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியில் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் வேலை செய்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி இவர் ஊர் திரும்பியுள்ளார்.
கொழும்பில் இருந்து வந்ததால் இவரிடம் நேற்று 19.11.2020 பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.










