கிரிக்கெட் மட்டையால் வந்த வினை: 13 வயது மாணவன் கொலை – நாவலப்பிட்டியவில் சோகம்

நாவலப்பிட்டியவில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கிடையில் கிரிக்கெட் மட்டை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையால், மாணவரொருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டிய மொன்டிகிறிஸ்டோ கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரிக்கெட் மட்டையால் தாக்கினார் எனக் கூறப்படும் மாணவன் நாவலப்பிட்டி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, கிரிக்கெட் மட்டைக்காக ஏற்பட்ட முரண்பாட்டில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் கடும் காயங்களுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles