கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலங்களின் தரம்குறித்து ஆராய விசேட குழு

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலங்களின் தரம்குறித்து ஆராய, விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

பொலிஸார், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியல் பிரிவு மற்றும் கடற்படையினர் ஆகியோர் இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சாக்கேணி மிதப்பு பால விபத்தின்போது அனர்த்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களின் நலன்களை விசாரிப்பதற்காக கிண்ணியா தளவைத்தியசாலைக்கு சென்றிருந்த அவர் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சாக்கேணி சம்பவத்தைப் போன்று மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படாத வண்ணம் பொறுப்புடன் செயலாற்ற வேண்டியது அனைவரினதும் கடமையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles