குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மே மாதம் 9 திகதி முதல் ஒரு நாள் கடவு சீட்டு வழங்கும் நடவடிக்கைகளை தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மே மாதம் 5, 6 மற்றும் 9ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள் மற்றும் மே 5ஆம் திகதி சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பபடிவங்களை கையளிக்க வந்து திணைக்களத்தினால் இலக்கம் ஒன்றை பெற்றுக்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
