கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், இரு பிள்ளைகளையும், காலி – பெந்தர பாலத்துக்கருகில் விட்டுவிட்டு, ஆற்றில் குதித்த பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் இன்று முற்பகல், 9 வயது மகனையும், ஒன்றரை வயது மகளையும் பாலத்துக்கு அருகில் நிறுத்திவைத்துவிட்டு, 40 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் பாய்ந்துள்ளார்.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட அவர், இளைஞர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறித்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பிள்ளைகள் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் உள்ளனர்.










