தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவலையை கட்டுப்படுத்தவதற்குரிய அரசியல் போரை முன்னெடுத்துவரும் எதிர்க்கட்சிகள், உள்ளுராட்சிசபைகளில் கூட்டு அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன.
இது தொடர்பில் தென்னிலங்கையில் உள்ள பிரதான கட்சிகள் ஆரம்பக்கட்ட பேச்சுகளை ஆரம்பித்துள்ளன எனவும், கூட்டு அரசாங்கம் அமைப்பதற்கு கொள்கை அடிப்படையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தனித்து ஆட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மைபலம் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்காது என எதிரணிகள் நம்புகின்றன. எனவேதான் உள்ளுராட்சிசபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முயற்சித்துவருகின்றன.
எனினும், தனித்து ஆட்சியமைப்பதற்குரிய ஆணையை மக்கள் தமக்கு வழங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தி உறுதியாக நம்புகின்றது.
உள்ளுராட்சிசபைத் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமாக இடம்பெற்றுவந்தது. தமிழ், சிங்கள புத்தாண்டு பின் தற்போது தேர்தல் பிரச்சாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
