நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் “ரோயல் டேப்” கிளப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் கவர்னர்ஸ் கிண்ணத்திற்கான குதிரைப் பந்தயப் போட்டியில் நுவரெலியா ரேஸ்கோஸ் கிராமத்தை சேர்ந்த குதிரை ஓட்ட வீரர் லோகேந்திரன் ரவிக்குமார் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
நுவரெலியாவில் ஏப்ரல் மாதம் நடைபெறும் வசந்தகால கொண்டாட்டங்களில் குதிரை ஒட்ட பந்தைய போட்டி சிறப்பு அம்சத்தை கொண்டதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இவ்வருடத்திற்கான குதிரை ஒட்ட போட்டி இன்று (14) காலை பத்து முப்பது மணிக்கு ஆரம்பமாகி மதியம்வரை நடைபெற்றது.
இப்போட்டிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த குதிரைப் பந்தய வீரர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
அதேநேரம் இவ்வருடத்திற்கான உயரிய விருதான “கவர்னர்ஸ்” விருதுக்கான கின்னத்தை போட்டியில் முதலிடம் பெற்ற ரேஸ்கோர்ஸ் கிராமத்தை சேர்ந்த குதிரை ஓட்ட வீரர் லோகேந்திரன் ரவிக்குமார் தனதாக்கி கொண்டார்.
இவருக்கான கேடயம் மற்றும் பரிசுகளை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
ஆ.ரமேஸ்.
		
                                    









