‘குரங்குகளால் ஆளுங்கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு”

ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைவரங்களுக்கு அப்பால் ‘குரங்கு விவகாரம்’ பற்றியும் பேசப்பட்டுள்ளதாம்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ‘குரங்கு விவகாரம்’ குறித்து கேள்வி எழுப்பி இதற்கு பிள்ளையார் சுழி போட்டாராம்.

“ இந்த குரங்கு தொல்லை தாங்க முடியவில்லை, எனது தொகுதியிலும் நிலைமை மோசம். ஆக அவற்றை சீனாவுக்கு அனுப்பும் முடிவை நிறுத்தவே கூடாது. இது விடயம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று”வினா எழுப்பினாராம் அந்த எம்.பி.

‘குரங்குகளுக்கு இன்னும் விசா’ கிடைக்கவில்லை என இதற்கு சிரித்தப்படியே பதிலளித்தாராம் ஜனாதிபதி.

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசங்க, “ குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப கூடாது. குரங்கு மூளையை அவர்கள் உண்கின்றனராம். நானும் எனது வீட்டில் 20 வருடங்களாக குரங்கு வளர்த்தவன். அதனால் அவ்வளவு பாதிப்பில்லை.” என்றார்.

அவரின் இந்த கருத்தையடுத்து கூட்டத்தில் சிரிப்பொலி மேலோங்கியது. “ அப்படியானால் குரங்குகளை கொண்டுவந்து உங்கள் வீட்டில் விடலாம், அதுமட்டுமல்ல உங்களுக்கு குரங்குதுறை அமைச்சையும் வழங்கலாம் போலும்” என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“ இது சிரிப்பதற்குரிய விடயம் அல்ல, குரங்கு பிரச்சினை பெரும் பிரச்சினைதான். இரண்டு சீன நிறுவனங்கள் என்னுடனும் பேச்சு நடத்தின. அவை இறைச்சிக்காக அல்ல, மிருகக்காட்சிசாலைக்கே கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்கு அனுமதி வழங்க வேண்டும்.” என ஒரு போடு போட்டாராம் மஹிந்தானந்த அளுத்கமகே. அவருக்கு விவசாயத்துறை அமைச்சரும் பக்கபலமாக இருந்தாராம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles