குருநாகல் – பத்தலகொட தோட்ட மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்றை அந்தத் தோட்டத்துக்கு நாளை அனுப்ப உள்ளதாக, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்தரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் தாெடர்பான பல சட்டங்கள் காலாவதியாகியுள்ளதாகவும் அச்சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான யோசனைகளை முன்வைப்பது அவசியம் எனவும் அவர் கூறுகிறார்.
பத்தலகொட தோட்டம் குறித்து சட்டத்தரணிகள் மனித உரிமை ஆர்வலர்கள் பேசுகிறார்கள். மலையக பிரதிநிதிகள் இன்னும் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை.
40 வருடங்கள் தொழில்புரிந்து ஓய்வுபெற்ற ஒரு பெண் தொழிலாளருக்கு வெறும் 2 இலட்ச ரூபாயே ஊழியர் சேமலாப நிதியாக கிடைத்திருக்கிறது.
நன்றி
Medialk.com
