“குருந்தூர்மலை தமிழர்களின் சொத்து அல்ல”

“ குருந்தூர்மலையில் பொங்கல் விழாவை நடத்திவிட்டோம் என்ற மமதையில் தமிழ் மக்களும் அவர்களின் அரசியல் பிரதி நிதிகளும் கருத்து வெளியிடுகின்றனர். பொங்கல் விழாவை நடத்தியமைக்காக குருந்தூர்மலை தமிழர்களின் சொத்து என்று அவர்கள் தப்புக்கணக்குப் போடக்கூடாது.”

– இவ்வாறு கூட்டாகத் தெரிவித்துள்ளனர் தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளான சரத் வீரசேகர, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ஸ ஆகிய எம்.பிக்கள் என யாழில் இருந்து வெளியாகும் டிஜிட்டல் நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில் –

“குருந்தூர்மலைக்கு எவரும் வந்து வழிபடலாம். மதவழிபாட்டைக் குழப்புவது பௌத்த சிங்களவர்களின் நோக்கம் அல்ல. சகல மதத்தவர்களையும் அவர்கள்
சமமாக மதிப்பவர்கள். ஆனால், பௌத்த சிங்களவர்களுக்குச் சொந்தமான குருந்தூர்மலையைத் தமிழர் கள் உரிமை கோருவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
பொங்கல் விழாவை நடத்தியமைக்காகக் குருந்தூர் மலை தமிழர்களின் சொத்து என்று அவர்கள் தப்புக் கணக்குப் போடக்கூடாது.

குருந்தூர்மலைக்கு நேற்றுச் சென்ற பௌத்த பிக்குகளும், பௌத்த சிங்கள மக்களும் அமைதியாக வழிபட்டார்கள். ஆனால், அங்கு பொங்கல் விழாவுக்கு வந்த தமிழர்கள், பௌத்த பிக்குவை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் ஆணித்தரமாகக் கூறுகின்றோம் குருந்தூர் மலை பௌத்தர்களின் சொத்து; அது தமிழர்களின் சொத்து அல்ல.” – என்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles