குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக யூரிய உரம் வழங்குவதற்கு விவசாய அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்கு பயன்படுத்துவதற்காக 3 லட்சத்து 65 ஆயிரம் யூரிய உர மூடைகள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெரும்போகத்தில் குறைந்த வருமானம் பெறும் சுமார் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு பச்சைப்பயறு பயிர்ச்செய்கைக்காக 18 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.










