கந்தப்பளை ஹைபொரஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்திலிருந்து கோனப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவுக்கு செல்லும் சந்தியில் வாகனங்கள்,மற்றும் பொதுமக்கள் அமைதியாக இருக்கும்படி தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சந்தியில் அடர்ந்த மரங்களில் குளவிகள் கூடுகட்டி இருப்பதால் இவ்விடத்தில் சத்தம் இட்டால் குளவிகள் கலைந்து தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மிக உயரமான மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் குளவிக் கூடுகளை அகற்றுவது என்பது கடினமானதாக உள்ளதாக தோட்டநிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் கோனப்பிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் மூன்றாம் பிரிவுக்கு செல்லும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் இந்த சந்தியிலிருந்து தினமும் பஸ் பயணத்தை மேற்கொள்ள காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் இவ்விடத்தில் அமைதியாக இருப்பதுடன் அச்சத்திலும் இருக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










