குளவிக்கொட்டு – 16 தொழிலாளர்கள் பாதிப்பு

அடாவத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களை , குளவிகள் கொற்றியதால் 16 தொழிலாளர்கள் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அடாவத்தை பெருந்தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் தேயிலைத் தளிர் கொய்யும்
கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளையில், மரமொன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து
பெண் தொழிலாளர்களை கொற்றத் தொடங்கின. இச் சம்பவம் இன்று இடம்
பெற்றுள்ளது.

ஏனைய தொழிலாளர்கள் புகையினை எழுப்பி, குளவிகளை அடங்கச் செய்து, ஆறு
பெண் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
ஏனையவர்கள் வீடு திரும்பினர்.

Related Articles

Latest Articles