மஸ்கெலியா, மவுஸ்ஸாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் ஒன்பது தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை (01) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த வேளையில், தேயிலைச் செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து, கொட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் நால்வர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர் என்றும் ஐந்து பேர் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.