” ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தான், கூட்டணி அமைத்தால்கூட இந்நிலைப்பாடு மாறாது.” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி.
ஐ.ம.சவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கவே ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம். கூட்டணி அமைப்பதில் நிதானம் தேவை. அரசமைப்பு ரீதியில் உள்ள சூழ்ச்சிகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
மொட்டு கட்சியினரை தாக்கியே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். இது மொட்டு கட்சிகாரர்களுக்கு புரியவில்லை. ஒரு கட்சியாலேயே மக்கள் போராட்டம் சீரழிக்கப்பட்டது. அந்த கட்சிக்கும் கடந்த காலத்தில் கரைபடிந்த வரலோறே உள்ளது. அந்த கட்சியின் செயலால்தான் ரணில் ஜனாதிபதியானார்.
அதேபோல பதவிகளை இலக்காகக்கொண்டு கூட்டணி அமைப்பதற்கு நாம் எதிர்ப்பு.” – என்றார்.










