கூரிய ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

ஐந்து வாள்கள் உள்ளிட்ட ஏழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்பட்டவில்லை.

ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இன்று காலை நடத்தப்பட்ட சோதனையின்போது வீடொன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வன்முறையில் ஈடுபடுவதற்குத் தயாராக குறித்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வீட்டில் வசித்த சந்தேகநபர் தலைமறைவான நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், மேற்படி நபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles