கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு சகோதரர்கள் கொலை! கிராண்ட்பாஸில் பயங்கரம்!!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகொடெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 24 வயதுகளுடைய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு சகோதரர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிரான்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles