கெஹலியவை பாதுகாப்போம் – மொட்டு கட்சி உறுதி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கும் என அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கடந்தவாரம் கையளித்துள்ளது.

Related Articles

Latest Articles