கேகாலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றமை அபாயநிலையை தோற்றுவித்துள்ளது. இன்று மாலை வரை (12ஆம் திகதி) தொற்றாளர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்துள்ளது.
இன்று மாத்திரம் 10 பேர் அடையாளப்படுத்தப்பட்டதுடன் இன்றுவரை மொத்தமாக 3ஆயிரத்து 522 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பிரதான நகரங்களை மையப்படுத்திய பிரதேச செயலகங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாவனல்லையில் 39 பேரும், கேகாலையில் 25 பேரும்,வரக்காபொலையில் 21 பேரும்,ருவன்வெல்லையில் 20 பேரும், தெஹியோவிட்டயில் 20பேரும், அரனாயக்கவில் 21 பேரும், புலத்கோஹ{பிட்டியவில் 17 பேரும்,எட்டியாந்தோட்டையில் 13பேரும்,
கலிகமுவயில் 15 பேரும், ரம்புக்கணையில் 12பேரும், தெரணியகலையில் 04பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் காரியாலயம் தகவல் வெளியிட்டுள்ளது. இவற்றில் அதிகமான தொற்றாளர்கள் மாவனல்லை மற்றும் கேகாலை பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.