கேகாலையில் 5,945 லீற்றர் டீசலுடன் ஐவர் கைது

கேகாலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 5945 லீற்றர் டீசலுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, லொறியொன்றில் 3000 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற போது, 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் பாணந்துறை, கனேமுல்ல மற்றும் மொரட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த பகுதியிலேயே நேற்று (13) அதிகாலை 2945 லீற்றர் டீசலுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் பொல்கஹாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் ஐவரையும் கேகாலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles