சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடிப்படையாகக்கொண்டே அவர் இந்த அறிவிப்பை விடுக்கவுள்ளார்.
எரிவாயு சிலிண்டன் வெடிப்புக்கு பிரதான காரணங்கள் எவை, அவற்றை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை என்பன தொடர்பில் இதன்போது தெளிவுப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.