சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை, இன்று முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடைகொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை 4, 910 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், 5 கிலோ மற்றும் 2.5 கிலோ எடையுடைய சிலிண்டர்விலை அதிகரிக்கப்படவில்லை. அவை பழைய விலையிலேயே விநியோகிக்கப்படும்.
