கைது பயத்தைக்காட்டி எம்மை ஒடுக்க முடியாது: நாமல் சூளுரை!

கைது செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள் என அச்சுறுத்தி எதிரணிகளை மௌனிக்க வைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், அந்த விடயம் ஒருபோதும் நடக்காது என சூளுரைத்துள்ளார் நாமல் ராஜபக்ச.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” இந்நாட்டின் சுயாதீன நீதித்துறை மற்றும் நீதிபதிகள்மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, எமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால் அவற்றை சட்டத்தின் பிரகாரம் எதிர்கொள்வோம். குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நிரூபிப்போம்.

அச்சுறுத்தல்மூலம் எதிரணிகளை மௌனிக்க வைக்கலாம் என அரசாங்கம் நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது. அரசாங்கம் தவறிழைந்தால் அதனை தொடர்ந்து துணிவுடன் சுட்டிக்காட்டுவோம்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles