கொட்டகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட சாமஸ்ட்டன் பகுதியில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அப்பகுதிக்கான தடுப்பூசி திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என கொட்டகலை பொது சுகாதார பிரிவின் பிரதேச வைத்திய உத்தியோகஸ்த்தர் வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
இப் பகுதியில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கோயில் பூஜையும், மரண சடங்கொன்றும், பூப்புனித நீராட்டு விழா ஒன்றும் இடம்பெற்றுள்ளன. இதில் பங்கேற்றவர்களில் 42 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதனால் குறித்த தோட்டத்தில் 14 லயன் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியில் மேலும் தொற்றாளர்கள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் இன்று (31) திகதி வழங்க இருந்த தடுப்பூசிகள் குறித்த பிரதேசத்திற்கு மாத்திரம் நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை நிறுவு பெற்ற பின்னர், தொற்று இல்லை என உறுதியானால் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
