கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் குறித்து இ.தொ.கா. விடுத்துள்ள அறிவிப்பு!

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பத்தனை தொடர் கடைத் தொகுதி தொடர்பில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று இ.தொ.காவின் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இது தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கொட்டகலை பிரதேச தலைவர் ராஜமணி பிரசாந்த்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி சௌமியபவாணில் இடம்பெற உள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் முன்னாள் உப தலைவர் சுரேஷ் குமார் ஆகியோரை சமூகமளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இ.தொ.கா பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட விரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இக்கட்டடத்தை மாவட்ட செயலாளர் ஊடாக அரச உடைமை ஆக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles