கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் லெச்சுமண் விஸ்வநாதனின் கோரிக்கைக்கு இணங்க, தலைவர் இராஜமணி பிரசாந்தின் திட்ட முன்மொழிவின் கீழ், 10 இலட்சம் ரூபா மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் கொட்டகலை ரொசிட்டா பாதை அபிவிருத்தித் திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர்களான லெச்சுமண் விஸ்வநாதன், கணபதி கண்ணதாசன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் லெச்சுமண், செயலாளர் விஜேசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
