நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் – 19 தடுப்புக்கான தடுப்பூசி வழங்கும் செயப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்றைய தினம் (14) ஆயிரம் ஆசிரியர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்தே தடுப்பூசி செலுத்தப்பட்டது என கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
கொட்டகலை சுகாதார பிரிவிலுள்ள 60 வயத்திற்கு மேற்பட்ட சகலருக்கும் தற்போது முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் வழங்கும் செயத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாகவும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
