கொட்டகலையில் சமாதான நீதவான்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்!

கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும், மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன் ஏற்பாட்டில் கொட்டகலை அனைத்து சமாதான நீதவான்களையும் ஒன்றிணைத்து சமாதான நீதவான்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை ரிஷிகேஷ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இவ் விழாவில் , கொட்டகலை மண்ணின் சமூக விழுமியங்களை பேணி பாதுகாப்பதுடன், போதைப் பொருள் மற்றும் குற்ற செயல்கள் அற்ற நகரமாக கட்டி எழுப்புவது, பாடசாலை கல்வி, நன்னடத்தை, சலக மதங்களுக்கிடையிலான சமாதானம், போன்ற செயல்பாடுகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.

இவ் விழாவில் பிரதம அதிதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி. வே.இராதாகிருஸ்ணன் ,சிறப்பு அதிதியாக சட்டத்தரணி நேரு. கருணாகரன் , பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம். ஆனந்தஸ்ரீ உட்பட, 40 க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்களும் கலந்து கொண்டனர்.

 

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles