கொம்பன் யானை குறித்து விசாரணை ஆரம்பம்

திருகோணமலை, எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த வாரங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் வீட்டு தோட்டங்களை சேதப்படுத்தி வருவதாகவும் பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த யானையின் வாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் வன விலங்கு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

யானை மரணித்தமை தொடர்பாக மிருக வைத்திய நிபுணர் சம்பவ இடத்திற்கு நாளை வருகை தர உள்ளதுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் வனவிலங்கு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles