கொரியாவில் தஞ்சமா? மைத்திரி கூறுவது என்ன?

தனக்கு நாட்டைவிட்டு வெளியேறும் எவ்வித திட்டமும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன நாட்டைவிட்டு வெளியேறி, தென்கொரியாவில் தஞ்சமடையவுள்ளார் எனவும், தென்கொரியாவில் உள்ள ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் குடும்பம் இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தனர்.

இந்நிலையில் நீங்கள் நாட்டைவிட்டு வெளியேற தயாராகிவருகின்றனரே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன,

“ நான் எங்கு செல்வது? நான் எங்கும் செல்லமாட்டேன்.” – என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹாவில் நடைபெறும் எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.

Related Articles

Latest Articles