‘கொரோனா’ கட்டுக்குள்வர கொட்டகலையில் யாக பூஜை!

கொவிட் – 19 வைரஸ் பரவல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து, அதன் தாக்கத்திலிருந்து நாடும் மக்களும் விடுபட இறையாசிவேண்டிய கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் விசேட யாக பூஜை நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரமே கொட்டகலையிலும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விநாயகர் வழிபாடு விசேட பிணி நீக்கும் 27 மூலிகைகளை கொண்ட விசேட யாக பூஜை, இடம்பெற்றதுடன் அதில் 108 தடவை மிருதஞ்ச பெருமானுக்கு நாம அர்ச்சினை இடம்பெற்றன.

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதனால் பூஜை வழிபாடுகள் சுகாதார பொறிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட அளவு எண்ணிக்கை பகதர்களே கலந்து கொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து கொரோனா ஒழிய வேண்டும் என விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றன. இப்பூஜையில் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles