கொரோனா தாண்டவம் குறித்து பாராளுமன்றில் இன்று விவாதம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (4) விவாதம் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

பிரதான சபை நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெற்ற பின்னர் முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணிவரை கொரோனா விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது. இது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது.

ஆளும், எதிரணி உறுப்பினர்கள் தத்தம் கருத்துகளை முன்வைத்த பின்னர், விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போது சுகாதார அமைச்சர் அரசின் நிலைப்பாடுகளை தெளிவுப்படுத்தவுள்ளார்.

அதேவேளை, நாளைகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. முற்பகல் 10 மணி முதல் இரவு 8 மணிவரை 10 மணிநேரம் விவாதம் இடம்பெறவுள்ளது.

Related Articles

Latest Articles