‘கொரோனா தேவியால் கடுப்பான வனிதா விஜயகுமார்’

சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ளவர்கள் ஒருபடி மேலே சென்று கொரோனா தேவி சிலை வைத்து மக்கள் விரைவில் கொரோனாவில் இருந்து விடுபட வேண்டும் என வேண்டுதலோடு வழிபட்டு வருகின்றனர். இ

துகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சில நெட்டிசன்கள் கொரோனாதேவி சிலை, பார்ப்பதற்கு வனிதா விஜயகுமார் போலவே இருப்பதாக ஜாலியாக கேலி கிண்டல் செய்து, அதுகுறித்த மீம்ஸ்களை அவருக்கே டேக் செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தை பார்த்த வனிதா விஜயகுமார், கடுப்பாகி, “எல்லோரும் இதை ஏன் எனக்கு ஷேர் செய்கிறார்கள்? என்று பதிவு செய்து கேள்வி எழுப்பியுள்ளார்”. இந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Related Articles

Latest Articles