கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கான விசேட அறிவித்தல்

கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் , வீண் அச்சத்தில் தேவையற்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை – என்று விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன  தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது வைத்தியர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. ஐ.டி.எச். வைத்தியசாலையில் பணிபுரிந்த நிலையிலேயே இவர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, குணமடைந்த பின்னர் சிலர், படியேற முடியவில்லை மூன்று வாங்குகிறது, உடல் சோர்வு தெரிகிறது என்றெல்லாம் கூறுவது தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வைத்தியர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எனக்கும் கொவிட் தொற்றியது. 14 நாட்கள் சிகிச்சை. அதன்பின்னர் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தல் என அப்போதைய நடைமுறையை பின்பற்றினேன். காலஎல்லை முடிவடைந்த பின்னர் மறுநாளே கடமைக்கு திரும்பினேன். இதுவரை உடலில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

என்னிடமும் இவ்வாறான பிரிவினர் வருகின்றனர். அவர்களை இரு பிரிவினராக எடுத்துக்கொள்ளலாம்.  வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஒட்சீசசன் பெற்று ஐ.சி.யூக்களில் இருந்தவர்கள் வருகின்றனர். இவர்களுக்கு ஓரளவு நோய் தாக்கம் இருக்கும்.முழுமையாக குணமடைய சிறுது காலம் எடுக்கும்.

ஆனால் ஆரம்பத்தில் நோய் அறிகுறி எதுவும் தென்படாமல், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்கள் நான்கு வாரங்களின் பின்னர் வருகின்றனர்.  தலைவலி, உடல்சோர்வு, வலி, மூச்சுவாங்கல் என பலவிதமான நோய் அறிகுறிகள் தொடர்பில் குறிப்பிடுகின்றனர்.

பெரும்பாலும் இளைஞர்களே இவ்வாறு சிகிச்சைக்கு வருகின்றனர். எதிர்காலத்தில் நோய்த் தாக்கம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தாலேயே அவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு நோய் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு, எனவே, தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அதிகம் பணம் செலவளித்து தேவையற்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.

வைத்தியர் ஒருவரை நாடி ஆலோசனை பெறவும். தேவை ஏற்பட்டால் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளவும்.” -என்றார்.

Related Articles

Latest Articles