கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் பூரணமாக குணமடைந்து, தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து இன்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கை ஊடாக ரமேஷ்வரன் தெரிவித்துள்ளவை வருமாறு,
” என்னை உயிர்ப்பித்த இறைவனுக்கு முதலில் நன்றி, அத்துடன் எனக்கு சிகிச்சையளித்த வைத்திய குழாமினருக்கும், எனக்காக ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்ட சர்வமதத் தலைவர்களுக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும், எமது பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், அரசியல் தலைவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொலைபேசி ஊடாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நலன் விசாரித்து, நான் மீண்டுவர பிரார்த்தனையில் ஈடுபட்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மக்களுக்கான எனது அரசியல் பணி மீண்டும் விரைவில் தொடரும்.” – என்றார்.
ரமேஷ்வரனின் ஊடகப்பிரிவு










