கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் பெற்ற வெற்றியைத் தொடர்வதற்கு, மக்கள் எதிர்காலத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணி செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.

பொருள் கொள்வனவு, ஆர்ப்பாட்டங்கள் அல்லது பொதுக் கூட்டங்களின் போது சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள்பிரதிப் பணிப்பாளர் நாயகம், நிபுணத்துவ வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோரியுள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் கொரோனா மரணம் மற்றும் தொற்றாளர் தொகை வெகுவாக குறைந்தது.இதனை பேணும் வகையில் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கோரப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி கொரோனா தொற்றினால் ஒருவர் மாத்திரமே உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
