கொரோனா வைரஸ் தொற்றால் 2021 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்று வரை 715 பேர் உயிரிழந்துள்ளனர் – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
412 ஆண்களும், 303 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையில் 13 பேர் மட்டுமே பலியாகினர். எனினும், 2ஆம் மற்றும் 3ஆம் அலைகளிலேயே அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.