நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்ட ஆண், இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நுவரெலியா , காலாபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய விஜயசுந்தரலாகே பாலித்த சந்தகெழும் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் மனநோயாளியென தெரியவந்துள்ளது.
சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
– நானுஓயா நிருபர் –
