கொழுந்து ஏற்றச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் பலி!

பண்டாரவளை புனகல தோட்டத்திற்குச் சொந்தமான உடஹேன பகுதியில் இன்று ( 27) மாலை தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடஹேன தோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திரத்தின் சாரதி சிகிச்சைக்காக கொஸ்லந்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் லியங்கஹவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசேல விஜேகோன் தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

ராமு தனராஜா

Related Articles

Latest Articles