” இந்த அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தால்கூட, மக்கள் ஓரணியில் திரண்டு வீதிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்கு ஓடவேண்டிய நிலைமை இரட்டைக் குடியுரிமை ஆட்சியாளர்களுக்கு ஏற்படும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.
” ஐக்கிய மக்கள் சக்தியால் சாதகமான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுகயீனத்தால் நான் பங்கேற்கவில்லை. ஒரு போராட்டத்தை குழப்பி, அதனை 10 போராட்டமாக மாற்றிய பெருமை அரசையே சாகும்.
முறையாக செயற்படாவிட்டால் தோல்வியை சந்திக்க நேரிடும் என்ற தகவல் போராட்டம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அப்போராட்டத்தை சஜித்தும் அவரின் சகாக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் எதிர்ப்பு எங்கிருந்து கிளம்பும் என்பது எங்களால் சரியாக குறிப்பிட முடியாது. அரசிடம் பெரும்பான்மை பலம் இருந்தால்கூட, மக்களின் எதிர்ப்பு அதைவிடவும் பலமானது. அவர்கள் அணிதிரளும் போது அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அமெரிக்காவுக்குச் செல்ல நேரிடும்.” – என்றார்.