‘கோ ஹோம் கோட்டா’ – தொடர்கிறது போராட்டம்! வலுக்கிறது ஆதரவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று புதன் கிழமை 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

‘கோ கோம் கோட்டா’ என்ற கோசத்துடன் கடந்த 09 ஆம் திகதி இளைஞர்களால் தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்டிருந்த போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது..

தன்னெழுச்சியான ஒன்றுகூடிய இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டததிற்கு பலர்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு வழங்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே, காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக “கோட்டாகோகம – Gottagogama” என பெயரிடப்பட்டுள்ள போராட்டக்களத்தில் நூலகம் ஒன்றும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து வகைகள் என்பன தன்னார்வலர்களால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

மகா சங்கத்தினர், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டக்களத்திற்கு வருகைதந்து ​தொடர்ச்சியாக தமது ஆதரவை நல்கி வருகின்றனர்.

Related Articles

Latest Articles