‘கோ ஹோம் கோட்டா’ – மலையகத்தில் 100 அடி மரத்தில் ஏறி தனிநபர் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பது உட்பட மேலும் சில விடயங்களை வலியுறுத்தி 100 அடி மரத்தில் ஏறி தனிநபரொருவர் இன்று போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

‘கோ ஹோம் கோட்டா’ வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில் தூப்பாக்கிசூட்டில் உயிரிழந்த நபருக்கு நீதி வேணடும் என வலியுறுத்தியுமே போராட்டம் இடம்பெறுகின்றது.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி கீழ் பிரிவு தோட்டத்தில் 45வயதுடைய பழனியாண்டி முருகேஸ் என்ற நபரே இவ்வாறு நூறு அடி உயரம் கொண்ட மரத்தின் மீது எறி இலங்கை தேசிய கொடியை பிடித்தவாறு, எதிர்ப்பு பதாதைகளை குறித்த மரத்தில் காட்சிப்படுத்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles