முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவெடுக்கும் செயற்பாட்டில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கு பங்கு இருப்பதாக உத்தர லங்கா சபையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கேகாலையில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகத்தில் அமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, மிரிஹானவில் உள்ள அவரது தனிப்பட்ட இல்லம் தாக்கப்பட்டதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியை தூதுவர் ஜூலி சுங் அடிக்கடி சந்தித்து வருவதாக தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் சில தீர்மானங்களை எடுப்பதில் இருந்து முன்னாள் ஜனாதிபதி தடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் முன் வாயிலில் இருந்து ஆர்ப்பாட்டத்தை அகற்றுவது போன்ற சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிதி கிடைக்காது என முன்னாள் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியும் அவ்வாறான அழைப்புகளுக்கு சம்மதித்ததாகவும் அதுவே இறுதியில் தம்மை பதவியில் இருந்து நீக்குவதற்கு வழிவகுத்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தூதுவர் ஜூலி சுங் கட்டுப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
