கோப் குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது மறு நியமனத்தை அறிவித்த SJB எம்.பி., பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழுவின் தலைவராக தன்னை மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை தோற்கடிக்க எதிர்க்கட்சி உறுதியாக நின்றதாக கூறினார்.

“தேர்வுக் குழுவில் உள்ள சிலர் எதிர்க்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயன்ற விதம் வெறுக்கத்தக்கது. இலங்கைக்கான எனது பொறுப்பை மீண்டுமொருமுறை நிறைவேற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது வேட்புமனுவுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் நன்றி தெரிவித்தார்.

தயக்கமின்றி எனது பெயரை ஆமோதித்ததற்காக சபாநாயகர் @YapaMahinda அவர்களுக்கும் நன்றி.

Related Articles

Latest Articles