சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி, சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்தார்.
இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா சாதனை வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் சில சாதனைகளை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார்.
சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார்.
சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இனனிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோஹ்லி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார். மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.