ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் , ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று அக்கட்சியின் பதில் தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஐக்கிய மக்கள் சக்தியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என்ற கருத்து இரு வருடங்களாக முன்வைக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க இன்னும் 12 வாரங்களே எஞ்சியுள்ளன.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தற்போது நடக்கும் பிரச்சினைகளை பார்க்கும்போது அக்கட்சியின் உத்தியோகப்பூர்வமற்ற தலைவராக ரணில் விக்கிரமசிங்க மாறக்கூடும்.” – என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின்போது சஜித் அணி எம்.பிக்கள் சிலர் மீண்டும் ஐதேகவில் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலையும் அக்கட்சி நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










